சூடான செய்திகள் 1

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|COLOMBO)-பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும் மற்றும் அமைச்சுக்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ. ஜயசுந்தர இதற்கு முன்னர் யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வெற்றிடத்துக்கு பொலிஸ் உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி வந்த யூ.பீ.ஏ.டீ.கே.பீ. கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

எரிவாயு,பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்