சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.

கிழக்கு ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெயக்கூடும் என்ற வளிமணடலளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா, மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Related posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை

விஜேதாஸ வந்தார் – ரவி இன்னும் வரவில்லை

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டில் அங்குலான உதார உயிரிழப்பு