சூடான செய்திகள் 1

பலாங்கொடை மாணவர் மற்றும் ஆசிரியருக்கு பிணை

(UTV|COLOMBO)-பலாங்கொடையில் கைது செய்யப்பட்ட சாதாரண தர பரீட்சையில் கைப்பேசியை பயன்படுத்திய மாணவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது , ஒருவருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் அப்பிரதேசத்தின் பாடசாலையொன்றில் பணிபுரியும் நிலையில் , 20 வயதுடைய தனியார் விண்ணப்பதாரரான மாணவர் நான்காவது தடவையாக ஆங்கில பாடத்திற்காக இவ்வாறு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்