(UTV|COLOMBO)-அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களது வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை தனியார் ஹோட்டல்களில், விசேடமாக அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல்களில் நடாத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைய அரசினால் சுற்றுவட்டம் ஒன்று நேற்று(06) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் நடாத்துவதற்கு அரசுக்கு உரித்தான அரங்குகள் மற்றும் நிறுவனங்கள் பல உள்ள நிலையில், அவற்றினை பாவிக்காது அதிக விலைகளை கொண்ட நட்சத்திர ஹோட்டல்களில் நிகழ்வுகளை நடாத்துவதால் அரச நிதியானது வீண் விரயமாவதாகவும், அதனை தடுக்கும் முகமாகவே ஜனாதிபதியினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.