சூடான செய்திகள் 1

கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மாணவர் கைது

(UTV|COLOMBO)-கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு கையடக்க தொலைபேசியுடன் பயணித்த தனியார் பரீட்சார்த்தி ஒருவர் காவற்துறையினரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்.

குறித்த பரீட்சார்தி பரீட்சை மண்டபத்திற்கு 20 நிமிடம் தாமதமாகி பிரவேசித்துள்ளதுடன் ஆங்கில வினாத்தாளிற்கு விடையளித்த விதம் தொடர்பில் பரீட்சை நிலைய பொறுப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பரீட்சார்த்தி காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்