சூடான செய்திகள் 1

10 ரூபாய் குறைப்பது தொடர்பில் முச்சக்கரவண்டி சங்கங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு

(UTV|COLOMBO)-ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று தடவைகள் எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால், முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் முச்சக்கரவண்டிச் சங்கங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன.

இவ்வாறு கட்டண குறைப்பை மேற்கொள்ள முடியாது என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டமையினால் முச்சக்கரவண்டிகளின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினால் குறைக்க உள்ளதாக இலங்கை சுயதொழில் புரிவோர் சங்கம் மற்றும் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் என்பன தெரிவித்துள்ளன.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இந்த சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

 

 

 

 

Related posts

அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பரிசோதகர்கள்

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு