சூடான செய்திகள் 1

தூதரங்களின் பொறுப்பில் இலங்கை பணிப்பெண்கள்

(UTV|COLOMBO)-வௌிநாடுகளுக்கு சென்றுள்ள 350 க்கும் அதிகமான இலங்கை பணிப் பெண்கள், சில நாடுகளின் தூதுரகங்களின் பொறுப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் சவூதி மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் தங்கியுள்ளதாக பணியகத்தின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உரியமுறையில் சம்பளம் வழங்காமை, தொழில் இடங்களில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிப்பெண்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த நாடுகளிலுள்ள தொழில் அமைச்சுக்களுடன் கலந்துரையாடி இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் பணிப்பெண்களுக்கு அவர்கள் தங்கியுள்ள நாடுகளிலேயே வேறு தொழில் தருநர்களிடம் பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..

கொழும்பு துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்