சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்…

(UTV|COLOMBO)-பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக ஆரம்பமாவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரக்கூடும் என்றும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை , மழை பெய்யும் போது அதிவேக வீதியை பயன்படுத்துவதில் அவதானத்துடன் இருக்குமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.

60 கிலோமீற்றர் வேகத்திற்கும் குறைந்த வேகத்தில் குறித்த சந்தர்ப்பத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

காரணத்தினை வெளியிட்டார் விஜயகலா

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு-கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்