சூடான செய்திகள் 1

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸை – கல்தேமுள்ள சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது, பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடு என சந்தேகம் நிலவுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.20 மணியளவில் கல்கிஸ்ஸை – கல்தேமுள்ள சந்திப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் முகத்தை மூடிய நிலையில் உந்துருளியில் பயணித்த இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

அந்த நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் சீ.சீ.ரி.வி காணொளி காட்சிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தம்-இதிபொலகே