கிசு கிசு

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்…

(UTV|GERMANY)-ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது.

எனவே, இதை ‘கடவுள் கடிதம்’ என அழைக்கின்றனர். அந்த கடிதம் நியூயார்க்கின் கிறிஸ்டி மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

இக்கடிதத்தை வாங்க ஆன்லைனில் கடும் போட்டி நிலவியது. முடிவில் அது ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.

அந்த கடிதம் ரூ.7 கோடி முதல் ரூ.7 கோடியே 70 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.20 கோடிக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐன்ஸ்டீன் கடிதங்கள் ஏலம் விட்டது இது முதன் முறையல்ல. ஏற்கனவே அவரது கடிதங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

ரஞ்சனுக்கு விடுதலை?

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற நபர் ஒருவர் திடீர் உயிரிழப்பு