விளையாட்டு

110 ஓட்டங்களுக்குள சுருண்டது பங்களாதேஷ் அணி

(UTV|SRI LANKA)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதனடிப்படையில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 112 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு

4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை

இந்த வருட அனைத்துப் போட்டிகளும் இரத்து