சூடான செய்திகள் 1

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரருக்கு பிணை

(UTV|COLOMBO) 2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 11வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(14) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

150,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவ​ர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வௌிநாட்டுப் பயண தடை விதிக்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

காலநிலையில் மாற்றம்…

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் முதியோர்த் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி