சூடான செய்திகள் 1

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) 2008-2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பில் தடுப்பில் உள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற நேவி சம்பத் உள்ளிட்ட 7 பேரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் இன்று