உலகம்

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமானத்தை தேடும் மலேசியா

எம்.எச் 370 என்ற மலேசிய விமானம் மர்மமான முறையில் காணாமல் போய் 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் பணியை மலேசிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்து சமுத்திரப் பகுதியில் கடந்த 2014 இல் மர்மமான முறையில் காணாமல் போன மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச் 370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அண்டனி லோக் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த விமானத்தைத் தேடும் பணியில் மீண்டும் ஈடுபட கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது.

நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் புதிய தேடுதலுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தேடுதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற பேச்சுவார்த்தையில் இதுவரை நாங்கள் ஈடுபடவில்லை’ என்று கூறினார்.

இவ்விமானத்தை மீண்டும் தேடும் பணிக்கு கடந்த டிசம்பரில் மலேசிய அரசு ஒப்புதல் அளித்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் திகதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்.எச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்து சமுத்திரப் பகுதியை கடக்கும்போது அவ்விமானம் திடீரெனக் காணாமல் போனது.

அவ்விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

விமானத்துறை வரலாற்றில் மிகப்பெரிய தேடுதல் முன்னெடுக்கப்பட்டும் அவ்விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.

-யாகூ நியூஸ்

Related posts

ஹாங்காங்- ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் 4 பேர் இராஜினாமா

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

காசா தாக்குதலில் – 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 மாணவர்கள் உயிரிழப்பு.