விளையாட்டு

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்கிக் கொள்ள எதிர்ப்பார்ப்பு

(UTV|COLOMBO)-நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்கிக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக, இலங்கை அணித் தலைவரான தினேஷ் சந்திமால் கூறியுள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நேற்று (04) அதிகாலை புறப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமால் தலைமையிலான 17 பேர் கொண்ட இலங்கைக் குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மத அனுஸ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் புறப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காத லஹிரு திரிமன்ன, சதீர சமரவிக்கிரம, லஹிரு குமார, நுவன் பிரதீப் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடவுள்ளனர்.

கடந்த வாரமும் கழகமட்டப் போட்டிகளில் பங்கேற்றேன். அதனால், இந்தத் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகியிருக்கிறேன். கடந்த கால போட்டிகளில் உபாதைக்குள்ளான நுவன் பிரதீப் இந்தத் தொடருக்குத் தயாராகியுள்ளார். லஹிரு திரிமான்ன மிகச்சிறந்த துடுப்பாட்டவீரர் என்பது எமக்கு தெரியும். ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் எமக்கு சவால்மிக்கது. அதனை மாற்றியமைக்க முடியுமானால் அதுவே திருப்புமுனையாக அமையும்

என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.சவாலை வெற்றிகொள்ளத் தயாராக இருக்கிறேன். இரு போட்டிகளிலும் நான் இடம்பெற்றிருக்கிறேன். சவாலுக்கு தயாராகியிருக்கிறேன்

 

 

 

 

 

Related posts

மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி