சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க பெருந்தோட்ட யாக்கங்கள் இணங்காத நிலையில், அதற்குஎதிர்ப்பு தெரிவித்து பல தோட்டங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 ரூபாய் அடிப்படை வேதனம் வழங்கப்படும் வரையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்தாடுகின்ற மற்றுமொரு தொழிற்சங்கமான தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் இந்த போராட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
அதேநேரம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை கருதி, தங்களால் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்