விளையாட்டு

கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் கம்பீர்

(UTV|INDIA)-இந்திய கிரிக்கட் அணியின் வீரர் கௌத்தம் கம்பீர் அனைத்து கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு முதல் இரண்டு தசாப்த காலமாக அவர் முதற்தர மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ரஞ்சி கிண்ணத் தொடரில் டெல்லிக்காக விளையாடி வரும் அவர், ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியுடன் தமது அனைத்து கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இந்த போட்டி நாளையதினம் ஆரம்பமாகிறது.

நீண்டகாலமாக கிரிக்கட்டில் சந்தித்த பின்னடைவுகளால், பாதகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதனால் தமது தன்னம்பிக்கையை தேடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், இந்தநிலையிலேயே தாம் அனைத்து வகையான கிரிக்கட்டில் இருந்தும் ஓய்வுப் பெறத் தீர்மானித்ததாகவும் கௌத்தம் காம்பீர் காணொளி ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று