சூடான செய்திகள் 1

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்டை சந்தித்து இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த யோசனையின் சரத்துக்கள் இன்னும் முழுமையாக அமுலாக்கப்படவில்லை.
 அடுத்த ஆண்டு மார்ச் மாததத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.
இந்தநிலையில் அதற்கு முன்னதாக இந்த விடயத்தில் தீர்க்கமான அழுத்தங்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சநதிப்பை அடுத்து டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட், மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை