சூடான செய்திகள் 1

இன்று காலை 9.30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் ஒன்று இன்று காலை 9.30க்கு சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது இன்றைய பாராளுமன்ற  அமர்வின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மற்றுமொரு அவநம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி சந்தித்திருந்த போது, அவர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இன்றைய அவநம்பிக்கை பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், பாராளுமன்றில்  ஆசன ஒதுக்கீடு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேள்வி எழுந்தது.

எனினும் முன்னைய அமர்வின் போது ஒதுக்கப்பட்டப்படியே இன்றைய அமர்வுக்கான ஆசன ஒதுக்கமும் அமையும் என்று பாராளுமன்றத்தின்  படைக்கலங்களின் சேவிதர்  தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய பாராளுமன்ற  அமர்வின் போது, சபையின் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேடவிருந்தினர் கூடம் என்பன மூடப்பட்டிருக்கும் என்று சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முன்னதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சீமெந்து விலை அதிகரிப்பு