வகைப்படுத்தப்படாத

காணாமலாக்கப்பட்ட மாணவர்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு

(UTV|MEXICO)-மெக்ஸிகோவில் காணாமலாக்கப்பட்ட 43 மாணவர்கள் தொடர்பில் விசாரணை ஆணைக் குழுவொன்றை அமைப்பதற்கு நாட்டின் புதிய ஜனாதிபதி அன்ட்ரெஸ் மெனுவல் லோபேஸ் ஒப்ரேடர் (Andrés Manuel López Obrador) கையெழுத்திட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் இகுவாலா (Iguala) பகுதியில் 43 மாணவர்கள் கடத்தப்பட்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பு, புதிய ஜனாதிபதி கடமைகளைப் பொறுப்பேற்ற முதலாவது நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள 65 வயதான அன்ட்ரெஸ் மெனுவல் லோபேஸ் ஒப்ரேடர், அரச சுகபோக வசதிகளைக் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி

16ம் திகதி வரை விளக்கமறியலில்-அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன