சூடான செய்திகள் 1

திலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள பெயர் பட்டியலை நிராகரிக்க உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் வேறு பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால் குறித்த வழக்கை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளருக்காக திலங்க சுமதிபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திலங்க சுமதிபால குறித்த பதவிக்காக போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டுகோள்