சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (03) முதல் குறைவு

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (03) முதல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முயற்சியாளர்களின் முச்சக்கர வண்டிகளின் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கூறினார்.

இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. நாளை முதல் முதலாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 50 ரூபாவாகும்.

 

 

 

Related posts

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டனர்…