சூடான செய்திகள் 1

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-வருட இறுதி காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பிரதி பணிப்பாளர் ஆர்.ஏ.டி. கஹாட்டபிற்றிய தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த வீதியின் ஊடான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வருட இறுதிக்கால பகுதியான தற்போதைய காலத்தில் வீதி விபத்துக்களால் பெருமளவிலானவர்கள் காயமடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதனால் பொது மக்கள் அவதானமாக தமது பயண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவ மனை கோரியுள்ளது.

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் அரசாங்கம் இருப்பதில் அர்த்தமில்லை – சஜித் பிரேமதாச