சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 8 மணிக்கும் முன்ன்ர் பரீட்சை நிலையங்களுக்கும் பரீட்சார்திகள் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேரின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு