வகைப்படுத்தப்படாத

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

(UTV|AMERICA)-பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

இவரது மகனான  ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(94)  நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடி திரும்பினார்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நீர்ப்பாசன பொறியியலாளர்களும் இன்று சுகயீன விடுமுறை

දිවයින හරහා සුලං තත්ත්වයේ තරමක අඩු වීමක්

உருளைக்கிழங்குக்கான வரி அதிகரிப்பு