வகைப்படுத்தப்படாத

ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

(UTV|GERMAN)-அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவரது முதல்நாள் நிகழ்ச்சி இரத்தாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்றுஆரம்பமாகிறது.

இதில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

மின்சார சாதனங்கள் சரியாக இயங்காததால் விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாது என்று விமானி தீர்மானித்தார். இதைதொடர்ந்து, அங்கிருந்து ஜெர்மனி நாட்டுக்கு திரும்பிய விமானம் ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறங்கியது.

இந்நிலையில், ஜி-20 மாநாட்டின் முதல்நாள் கூட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது. வேறொரு பயணிகள் விமானம் மூலம் இன்று அர்ஜென்டினா சென்றடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் இன்று இலங்கை விஜயம்

இருளில் மூழ்கிய வெனிசூலா:15 பேர் உயிரிழப்பு