சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சரேசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததாக  நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

இதன்போது பிரதமர் குறித்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

Related posts

இனவாதிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்வதால் அச்சத்தில் உறைந்துபோயுள்ள முஸ்லிம் மக்கள்..

மூவர் கைது…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு