சூடான செய்திகள் 1

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலா பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இரவு 07.00 மணியளவில் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பம்…

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு