சூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

(UTV|COLOMBO)-ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ‘நீதித்துறை கைவினை’ எனும் தொனிப்பொருளிலான வாகனப் பேரணி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு மாநகர சபைக்கு முன்பாகவிருந்து, நாளை(01) மாலை 6:30க்கு ஆரம்பமாகும்.

குறித்த இந்த வாகனப் பேரணியின் முதலாவது நாள், களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய நகரங்களினூடாக தெவிநுவர நகரத்தைச் சென்றடையும். 2ஆம் திகதி, தங்கல்ல நகரில் விசேட கூட்டமொன்றும் நடத்தப்படும். அதன் பின்னர், கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறும்.

வாகனப் பேரணி, மொனராகலையூடாக மஹியங்கனை ரஜமஹா விஹாரைக்கு வந்தடைந்ததன் பின்னர், விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறும் என குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

பொரள்ளையில் நாரஹேன்பிட்ட நோக்கிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோக தடை