சூடான செய்திகள் 1

நுவரெலியா – தலாவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

(UTV|COLOMBO)-டெஸ்போட், கிரிவெட்டி வழியாக செல்லும் நுவரெலியா – தலாவாக்கலை ஏ7 பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி குறித்த வீதியில் உள்ள பாலத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக பாரமான வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தாதாக் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று, குறித்த பாலத்தின் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பணிகள் நிறைவு பெறாமையினால் தொடர்ந்தும் எந்த ஒரு வாகனத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை

”பிடிக்காவிட்டால் வெளியேறவும்” அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது