சூடான செய்திகள் 1

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர், தரம் ஆறில் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரபல பாடசாலைகளைப் பெறுவதற்காக கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் தற்சமயம் கணினிமயப்படுத்தும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு