சூடான செய்திகள் 1

சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்

(UTV|COLOMBO)-வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைபின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையால், முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக வட பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தமக்கான உரிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து, தன்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு அவர் அந்த கடித்தில் கோரியுள்ளார்.

 

 

 

 

Related posts

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

நாளை 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவிக்கும் மகளுக்கும் பிணை -(UPDTAE)