சூடான செய்திகள் 1

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2956 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், 2956 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

அவற்றில் 1848 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

ஊழல் சம்பந்தமாக 1286 முறைப்பாடுகளும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை சம்பந்தமாக 411 முறைப்பாடுகளும் முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்தல் சம்பந்தமாக 88 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழு இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், நாடு முழுவது நடத்திய 33 சுற்றிவளைப்புக்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 35 பேர் அரச அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றங்களில் 338 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 95 வழக்குகள் முடிவடைந்துள்ளதுடன், 61 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

 

 

 

 

Related posts

நாட்டைவிட்டு ஓடும் மைத்திரி?

திகன பகுதியில் அசாதாரண சூழ்நிலை – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

இன்றும் தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு