(UTV|COLOMBO)-பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை விரைவில் மாணவர்களுக்கு விநியோகிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதி அட்டைகளை இதுவரை மாணவர்களுக்கு விநியோகிக்காத பாடசாலை அதிபர்கள் தொடர்பில் மாத்தளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலை அதிபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதி அட்டைகள் தொடர்பில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் தீர்வு வழங்கும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை, 4,661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.