சூடான செய்திகள் 1

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பிட்டிகல, மத்தக பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டிகல, பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து போர 12 வகை துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் மற்றும் கல்கட்டஸ் வகை துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 45 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மதவாச்சி – அனுராதபுரம் வீதியில் கோர விபத்து ; மூவர் பலி

பொதுத் தேர்தல் ஒன்றினை கோரி, கல்வியாளர்கள், தொழிற் துறையினர் இன்று கொழும்புக்கு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை