சூடான செய்திகள் 1

பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்கள்

(UTV|COLOMBO)-சமூகத்தில் பாரிய சவால்களாக காணப்படும் குற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய துரித வேலைத்திட்டம் தொடர்பாகவும் அதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்தி தேவையான அதிகாரங்களை அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் கட்டுப்பாடு, குற்றங்களை குறைத்தல் மற்றும் வாகன விபத்துக்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கையில் காணப்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பொலிஸார், முப்படையினர் ஆகியோரின் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டத்திற்கான சட்டவாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அந்நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார். அத்தோடு போதைப்பொருட்களுடன் தொடர்பான குற்றங்களுக்கு செலுத்தப்படும் தண்டப் பணத்தினை திருத்தம் செய்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குற்றங்களையும் பாதாள உலகத்தினரையும் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கான சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சிறைச்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த அனைத்து சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட சகல நிறுவனங்களும் தமது பொறுப்பினை உரியவாறு நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறிவதற்காக மேலும் இரண்டு வாரத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்ய பணிப்புரை விடுத்தார்.

வீதி விபத்துக்களை குறைத்தல் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் 2009 ஆம் ஆண்டில் மோட்டார் வாகன திணைக்களத்தினால் புள்ளி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தொழிநுட்ப குறைபாடுகள் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதுபோனது. அதற்கான தடைகளை நீக்கி அத்திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்தவும் இலத்திரனியல் கொடுப்பனவு முறையினூடாக தண்டப் பணம் செலுத்தும் முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்குள்ள வாய்ப்பு தொடர்பாகவும் கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சாரதிப் பயிற்சி பாடசாலைகளை தரப்படுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளை நெறிப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை பின்பற்றுமாறு உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் சட்ட வரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு துறை பிரதானிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டதிட்டங்கள் சமூகத்தில் பாரிய சவால்களாக காணப்படும் குற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய துரித வேலைத்திட்டம் தொடர்பாகவும் அதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்தி தேவையான அதிகாரங்களை அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் கட்டுப்பாடு, குற்றங்களை குறைத்தல் மற்றும் வாகன விபத்துக்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கையில் காணப்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பொலிஸார், முப்படையினர் ஆகியோரின் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டத்திற்கான சட்டவாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அந்நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார். அத்தோடு போதைப்பொருட்களுடன் தொடர்பான குற்றங்களுக்கு செலுத்தப்படும் தண்டப் பணத்தினை திருத்தம் செய்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குற்றங்களையும் பாதாள உலகத்தினரையும் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கான சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சிறைச்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த அனைத்து சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட சகல நிறுவனங்களும் தமது பொறுப்பினை உரியவாறு நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறிவதற்காக மேலும் இரண்டு வாரத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்ய பணிப்புரை விடுத்தார்.

வீதி விபத்துக்களை குறைத்தல் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் 2009 ஆம் ஆண்டில் மோட்டார் வாகன திணைக்களத்தினால் புள்ளி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தொழிநுட்ப குறைபாடுகள் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதுபோனது. அதற்கான தடைகளை நீக்கி அத்திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்தவும் இலத்திரனியல் கொடுப்பனவு முறையினூடாக தண்டப் பணம் செலுத்தும் முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்குள்ள வாய்ப்பு தொடர்பாகவும் கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சாரதிப் பயிற்சி பாடசாலைகளை தரப்படுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளை நெறிப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை பின்பற்றுமாறு உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் சட்ட வரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு துறை பிரதானிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Related posts

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பம்…

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

அநுராதபுர மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் 8 ஆம் திகதி வரை விளக்கமறில்