சூடான செய்திகள் 1

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படைய உரிமையை மீறி மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

 

 

 

Related posts

உலக வாழ் இந்து மக்களால் இன்று (04) மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்