(UTV|COLOMBO)-மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் அண்மையில் 5 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதன்போது 48 ஆயிரத்து 791 இடங்கள் காண்காணிக்கப்பட்டுள்ளன.
இதன்போது டெங்கு நுளம்புகள் பரவுவக்கூடிய 11 ஆயிரத்து 148 இடங்களும், நுளம்பு குடமிகளுடன் கூடிய ஆயிரத்து 444 இடங்களும் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அந்த அமைச்சு, பொது மக்களிடம் கோரியுள்ளது.