கேளிக்கை

ஒவ்வொரு ஃபிரேமையும் நான் ரசித்து பார்த்தேன்- தினேஷ் கார்த்திக்

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் தான் ரசித்து பார்த்ததாகவும், இந்த படத்தின் பாடல்கள், குறிப்பாக ‘காதலே காதலே’ பாடல் என்னை மிகவும் கவர்ந்தன என்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு பாராட்டுக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் ஒரு மிகப்பெரிய விஜய்சேதுபதி ரசிகர் என்றும் அவருடைய நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறிய தினேஷ் கார்த்திக், தான் மட்டுமின்றி வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த் ஆகியோர்களும் இந்த படத்தை ரசித்ததாக தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த டுவீட்டுக்கள் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

ஜெயம் ரவியுடன் டூயட் பாடும் காஜல்

நடிகைகள் வெறும் கவர்ச்சிக்கானவர்கள் மட்டுமல்ல…

திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்,சிம்பு ஜோடி