(UTV|COLOMBO)-சுமார் 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை வௌிநாட்டிற்கு கடத்த முயன்ற தம்பதிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 மில்லியன் ரூபா இலங்கை நாணயத்தாள்கள் மற்றும் 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான குவைத் டினார் உட்பட நாணயங்களையே குறித்த தம்பதிகள் இவ்வாறு கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட தம்பதிகளில் மனைவி மாத்தளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கணவர் குவைத் நாட்டு பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (26) மாலை 6.15 மணி அளவில் குவைத் நாட்டிற்க்கு செல்வதற்காக விமான நிலையத்தில் இவர்கள் வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களிடம் இருந்து 2,410 குவைத் டினார் மற்றும் 3 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை நாணயத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.