வகைப்படுத்தப்படாத

காலநிலை மாற்ற அறிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை

(UTV|AMERICA)-காலநிலை மாற்றம் தொடர்பில் தமது அரசாங்கத்தால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் நம்பிக்கையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமாதல் தொடர்பில் கவனம் செலுத்தாதவிடத்து, பொருளாதாரத்தில் அமெரிக்கா பின்னடைவைச் சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தை தாம் நம்பப் போவதில்லை எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தக் காலநிலை மாற்றத்தால் பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்பதுடன், சுகாதாரத்துக்கு கேடு ஏற்படுமெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உலகின் பிரபலமான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Prisons Dept. not informed on executions

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

கடும் புழுதிப்புயலால் செம்மஞ்சள் நிறமாக மாறிய வானம்…