சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு அடுத்த மாதம் 4 ஆம் திகதி…

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ, கட்சியின் விசேட மாநாடு அடுத்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட அறிவிப்பை வெளியிட எதிர்ப்பார்க்கிறார்.

இதன்போது, நாட்டின் அரசியல் நிலைமை, கட்சியின் எதிர்காலம் மற்றும் எதிர்கால செயற்பாடு என்பன குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பார் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ