சூடான செய்திகள் 1

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் விமல் வீரவங்சவின் தொலைபேசி மற்றும் நீர் கட்டண சிட்டைகளை பரிசீலனை செய்வதற்காகவே குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் தமது வேதனத்தின் மூலம் ஈட்ட முடியாத 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை தமது உரிமையாக கொண்டிருந்தமை தொடர்பிலேயே விமல் வீரவன்ஸவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

 

 

 

 

Related posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது

பலப்படுத்தப்பட்ட லேக் ஹவுஸ் பாதுகாப்பு

பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை ரத்து