கேளிக்கை

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் அமைரா…

(UTV|INDIA)-அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர். இப்போது காதலை தேடி நித்யானந்தா படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார். திரிஷா இல்லேன்னா நயன்தாரா பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் மீண்டும் அமைரா தஸ்தூர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இதில் பிரபுதேவா ஹீரோ. சார்லி சாப்ளின் 2, தேவி 2, எங் மங் சங், தேள், பொன்மாணிக்க வேல் படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்தியில் சல்மான் கானை வைத்து அவர் இயக்க இருந்த தபங் 3 படம் தள்ளிப்போகிறது. இதனால் தமிழில் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருக்கிறார்.

 

 

 

 

Related posts

ஓவியா மீது பொலிஸில் புகார்!

சொப்பன சுந்தரிக்கு பதில் கிடைக்குமா?

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்