கேளிக்கை

ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ரூ.60 லட்சம் கேட்ட இலியானா

(UTV|INDIA)-பாலிவுட் சென்ற பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவை மறந்துவிட்டார் இலியானா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் அமர் அக்பர் அந்தோணி படத்தில் ரவிதேஜாவுடன் அவர் நடித்தார். சமீபத்தில் இந்த படம் வெளியானது. இந்நிலையில் ராம்சரண் தேஜா, கியரா அத்வானி நடிக்கும் வினயா விதேயா ராமா தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இலியானாவை கேட்டனர். அதற்கு ரூ.60 லட்சம் சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இலியானா.

தென்னிந்திய சினிமாவில் தனக்கு டிமாண்ட் இருப்பதாக கூறிய இலியானா, அதனாலேயே இவ்வளவு சம்பளம் கேட்பதாகவும் சொன்னார். அவர் கடைசியாக நடித்த அமர் அக்பர் அந்தோணி படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததை தயாரிப்பாளர் கூறியும் சம்பளத்தை குறைக்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

 

 

 

 

Related posts

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்…

நயன்தரா பற்றி சர்ச்சை கருத்து – ராதாரவிக்கு நேர்ந்த கதி!!!

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை