சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (26) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 30 திகதி மற்றும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668