சூடான செய்திகள் 1

பல இடங்களில் நீர்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று நீர்வெட்டு அமுலாக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரையான 18 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கமைய மூலம் கொழும்பு, தெஹிவளை -கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகரசபைகள் – மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைகள் – கொட்டிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபை ஆகியவற்றிற்கு உட்பட்ட பிரதேசங்கள் பாதிக்கப்படும். சொய்சாபுர வீடமைப்பு தொகுதிக்கான நீர் விநியோகமும் இடைநிறுத்தப்படும்.

 

 

 

 

Related posts

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று