சூடான செய்திகள் 1

UPDATE-பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-மீண்டும் பாராளுமன்றம் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் நவம்பர் 13 ஆம் திகதி பிறப்பித்தது.

பின்னர் குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாராளுமன்றம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கூடிய பின் 15 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை சபாநாயகர் கருஜயசூரிய ஒத்திவைத்தார்.

பின்னர் 15 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடிய போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை அடுத்து 19 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் 19 ஆம் திகதி நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் 23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

மழை தொடர்ந்தும் நீடித்தால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிக்கலாம்