வகைப்படுத்தப்படாத

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|INDIA)-கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் இயங்கும் பாடசாலைகளுக்கு  மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அரசாங்க படைகள் கடுமையான தாக்குதல்

Premier appoints Committee to look into Ranjan’s statement

100க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாயம்