சூடான செய்திகள் 1

சிறுமியின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோய்னுடன் பெண்கள் கைது

(UTV|COLOMBO)-அம்பலாங்கொடை கடற்பரப்பில் ஹெரோயினுடன் சிறுமியொருவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டியொன்றை சோதனையிட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இவர்களிடம் இருந்து 4 கிராம் 365 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படட் 6 வயது சிறுமியின் உள்ளாடையில் மறைத்து வைத்து குறித்த ஹேரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்கள் 40 மற்றும் 38 வயதுடையவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுமி 40 வயதுடைய பெண்ணின் பேத்தி என தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

சஜித், கோத்தா இணைய மோதல்

மின்சாரத்தடையை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தை முன்வைத்த அமைச்சர் ரவி…

வர்த்தகரை கத்தியால் குத்திய கொள்ளையர்…